மருது மன்னர்களின் ஆட்சித் திறம், போர்க்கலை உத்தி, சமூக நல்லிணக்கம், சமய நல்லிணக்கம், விதவைகள் மறுமணம். நீர் மேலாண்மை, நெல் வேளாண்மை, நிர்வாக மேலாண்மை, சுதேசி மன்னர்களை இணைத்து அமைத்த தென்னிந்திய தீபகற்பப் பேரவை. தமிழகத்தின் முதல் பிரகடனமான ஜம்பதீபப் பிரகடனம், தன்மானம், மண்மானம், தழிழணர்வு, நட்புக் காத்தல், நாடு போற்றல் போன்ற செய்திகளோடு மருது மன்னர்களோடு விடுதலைப் போராளிகள் 500 பேரை திப்பத்தூர் வீதிகளில் தூக்கிலிட்ட ரணங்களையும். சொந்த பந்தங்களை தீவாந்திரம் அனுப்பிய கொடுமைகளையும் விவரிக்கும் இந்நூல். மண் மானத்தையும் தன் மானத்தையும் மனதுக்குள் மலரச் செய்கிறது.