எப்பொழுதும் எல்லோரிடனும் இணக்கமாக வாழவே விரும்பும் எனதருமை உன்னத நட்பு நண்பர்களே! நாம் நினைத்த மாதிரி எல்லா நேரத்திலும் அப்படி அமைவதில்லைதானே?.. இதற்குக் காரணம் நாமா?அல்லது மற்றவர்காள? நாம் இணக்கமாக இருக்க முனைந்தாலும், நம் எதிரில் உள்ளவர், நம்மை எதிரியாக பார்க்கும்போது, நாம் எப்படி இணக்கமாக இருக்க முடியும் என்று கேட்கத் தோன்றுகிறதா? இணக்கம் என்பது உண்மையில் நாமும் எதிரில் உள்ளவரும் இணங்கி வருவதல்ல. எதிரில் இருப்பவர் எத்தன்மையில் இருந்தாலும், நாம் இணக்கமாக இருக்க முடியும். அட, பொங்க சார்! ஆகக்கூடிய விஷயமாகச் சொல்லுங்க. அதைவிட்டு விட்டு, ஆகாத காரியத்திற்கு ஆளத் தேடறீங்களா? அதுக்கு நான் இல்லைங்க! என்று ஜகா வாங்குவது' புரிகிறது. இன்னமும் சொல்கிறேன். இது ஆகக்கூடிய வேலைதான் என்பதை அழுத்தமாக, ஆனால் அன்பு கலந்த கருணையுடன் சொல்கிறேன.