நம் உடலில் உயிர் உள்ளவரை அசைவிருக்கும்; அசைவிருக்கும்; அசைவிருக்கும் வரை ஆசை இருக்கும். ஆசை அனைத்துமே நிறைவேறாது. எனவே, ஏக்கமும் இருக்கும். ஆசையின்றி வாழ முடியும்? நிச்சயமாய் முடியாது. இருவருக்கிடையே சண்டை, ஒருவர் அடங்கி,விட்டுக் கொடுத்ததால் அமைதி பிறக்கிறது. இல்லையென்றால் பகை தொடர்கிறது.
இதுபோல் ஏதாவது ஒன்றை விட்டால் வேறொன்று கிடைக்கும் என்பது உலக நியதி. கோபத்தை விட்டால் சுமுகமான உறவு கிடைக்கும்; பேராசையை விடும்போது போதுமென்ற மன நிறைவு கிடைக்கும். இதுபோல் இவ்வுலக்இல் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நம்மிடமுள்ள பற்று என்ற தீமை தரும் குணத்தை, உணர்ச்சியை விடுவதற்கு வேறு ஒன்றைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதுவும் எப்படி? சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டும்.