எனக்கும் இந்தக் கதைகளுக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தமில்லை. ஆன்றோர்களும் சான்றோர்களும் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் கொஞ்சம் தேடி எடுத்து, நம்ம மக்களுக்குத் தகுந்தமாதிரி எளிமைப்படுத்தி, 'இன்று ஒரு தகவல்' என்கிற வானொலி நிகழ்ச்சி வாயிலாக அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தேன்.
"இவை பயனுள்ள நீதிக் கதைகள். இவற்றில் பயனுள்ள செய்திகள் பல அடங்கியுள்ளன. இவை பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் பலருக்கும் போய்ச் சேரவேண்டும்" என்று அவர் விரும்பியதன் விளைவுதான் இது.