'உங்கள் சிறகுகளில் நான் அமைதியை எழுதுகிறேன். நீங்கள் பூமியெங்கும் பறந்து
செல்லுங்கள்' மானசீக ஆசிரியராக நான் நேசிக்கும் சசாகியின் கடைசிநேர
வார்த்தைகள் இது. சாதாரண காகிதம் கொக்காகவும், யானையாகவும், தும்பியாகவும்
மாறி உருவங்கள் கொள்வதும் உயிரில்லாத அந்த உருவங்களை குழந்தைகள்
உயிர்களாக பாவித்து தங்கள் உலகங்களுக்குள் நடமாட வைப்பதுமே புரட்சியாகவும்
மாறுதலாகவும் நான் நம்புகிறேன். இது நான் குழந்தைகளிடம் கற்றுணர்ந்த
ஞானம்..