இந்த நாவலின் தலைப்பு விசித்திரமானது. அரசப் பாளைய பண்ணையார் தனது மகளை விசாகப்பட்டணத்தில் பணிபுரியும் டாக்டர் தர்மலிங்கத்துக்கு மணம் செய்து வைத்து சீதனமாக பண்ணையில் கூலி வேலை செய்யும் வீரப்பன் (வயது 70) என்ற பெரியவரை பெண்ணுடன் அனுப்பி வைத்தார். அங்கு அந்தப் பெரியவர் கொத்தடிமையாக எல்லாப் பணிகளையும் சம்பளமில்லாமல் செய்ததோடு, நாயினும் கேவலமாக நடத்தப்பட்டார். அப்படிப்பட்ட கொடூரமான குடும்பம் தனது இல்லத்திற்கு தர்மபவனம் என்று பெயர் சூட்டியது. என்ன கொடுமை! அதனால் தர்ம்பவனக் காவல்காரன் என்ற பெயரை நாவலுக்கு ஆசிரியர் சூட்டினார்.
இந்தப் பின்னணியில் கதை கூறப்பட்டுள்ளது.