அரை நூற்றாண்டுக் காலம் சலியாது இயங்கி வரும் கவிஞர் சிற்பி தனது கவிதையின் சாலையை எப்போதும் செப்பனிட்டபடியே பயணம் செய்பவர். கரடுமுரடான பாதையில் தனது பாதங்களைப் பதிய விட்டு நடந்து நடந்தே தனக்கென ஒரு ஒற்றையடிப் பாதையை உருவாக்கிக் கொண்ட மூத்த கவிஞர் அவர்.
21 கவிதைத் தொகுதிகள் உள்ளிட்ட 85 நூல்களை எழுதியிருக்கும் கவிஞர் சிற்பி தனது எண்பத்தைந்தாவது வயதில் இன்றும் முகநூலில் தனது கவிதைகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். மரபுக் கவிதையின் மண்பார்த்து புதுக் கவிதையின் விண்பார்த்த ஒரு தமிழ்க் கவியின் இன்றைய டிஜிட்டல் யுகத்தின் முகநூல் கவிதைகள் இவை.