இந்த நூல், தமிழ் மக்களில் சிலரே அறிந்த ஆனால் உலகமெங்கிலும் பரவி வாழும் தமிழ் மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆபூர்வ மனிதனின் கதை. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். சிந்தனைச் சிற்பிக்கு இன்று ஏற்பும் பெருமையும் புகழும் கிடைத்துள்ளதெனில் அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் இந்த மாமனிதர், நாகை முருகேசன் ஆவார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் இந்திய தேசிய காங்கிரஸ் சுயமரியாதை இயக்கம்-பொதுவுடைமை இயக்கம் ஆகிய முப்பெரும் இயக்கங்களில் தடம் பதித்தவர், முன்னோடி எனலாம். சிங்காரவேலருடைய நிழலாக, சாயலாக ஒளிர்ந்து திளைத்தவர் நாகை முருகேசன்.