அறிவியலைத் தமிழில் சொல்வது, அறிவியல் துறையில் தமிழை வளர்ப்பது என்ற இரு குறிக்கோள்களுடன் செயல்பட்டு வரும் அறிவியல் தமிழ் இன்று பலரது கவனத்துக்கும் உட்பட்டு ஓர் அறிவுசார் துறையாக வளர்ச்சி பெற்று வளருகிறது. '' தமிழ் வளர்க்கும் அறிவியல்'' என்ற இந்த நூலின் தலைப்பும் இதுபோன்றே தமிழை வளர்க்கும் அறிவியல், அறிவியலை வளர்க்கும் தமிழ் என இரு கருத்துக்களை உட்கொண்டதாகும். எந்த அறிவையும் எளிதாகவும் தெளிவாகவும் பெற்றுப் பயனுற வேண்டுமெனில், அதற்குத் தாய்மொழியே பெரிதும் உதவும். கல்வியாளர்களும் உளவியலாளர்களும் இதை அழுத்தமாக்க் கூறக் காரணம் தாய்மொழி வழிக் கல்வியின் சிறப்பு கருதித்தான்.