பிழைகள் இல்லாத மனிதன் இல்லை" நம்முடைய வாழ்க்கையில் சிறு சிறு பிழைகள் செய்து அவற்றின் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் அறிவோடு தான் நம் பயணத்தை தொடங்குகிறோம். இந்த பிழைகளினால் கற்றுக்கொண்ட பாடங்கள் அனைத்தும் மிகவும் சுவாரஸ்யம் மிகுந்தது. அந்த சுவாரஸ்யத்தை சிறு சிறு பகுதிகளாக பிரித்து தொகுக்கப்பட்டதே இச்சிறுகதை தொகுப்பு.சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட பிழைகளை கண்டறிந்து அவற்றை களையும் போது வாழ்வு சிறக்கும். இந்த பிழைகள் நமக்கு உணர்த்தும் பாடங்களை வாசிக்கலாம் இந்திரா சௌந்தர்ராஜனின் அழகிய நடையில்...