இயற்கை அழகானது; இயற்கையால் படைக்கப்பட்டவை அனைத்தும் அழகானவை. மழை அழகு: மழையைத் தரும் மேகம் அழகு. மலை அழகு; மலையில் தோன்றும் அருவி அழகு. இவ்வாறு கண்ணுக்குத் தோன்றும் அழகுக் காட்சிகளையெல்லாம் அழகுறக் கூறி, மனிதனின் குணம், நடத்தையின் அழகு எவ்வாறு வடிவம் பெறுகிறது என்றும் அந்தக் குணம், நடத்தையின் அழகு மனித சமுதாயத்தில் எப்படி அழகு சேர்க்கிறது என்றும் விளக்குகிறது இந்த நூல். கருத்துச் செறிவு மட்டுமின்றி எளிய தமிழ்நடையும் இந்நூலுக்கு அழகு!