இயற்கையின் பச்சைக் குழந்தையாக இருந்த வாழ்க்கை இடம் பெயர்ந்து. இடம் பெயர்ந்து நகரத்தின் சாம்பல் படர்ந்து இறந்தக் காலத்தை மீட்டெடுக்க நினைக்கிற நிகழ் காலத்தின் துயரம்தான் சாமான்யனின் கவிதைகள். ஒரு கவிஞன் பசியையும் வலியையும் மரணத்தையும் பாடுவது என்பது அதற்கு எதிராக வாழ்வைக் கைத்தலம் பற்றி நடப்பதற்குத்தான். இம்மக்களைப் பற்றிச் சிந்திக்காதவன் கவிஞனாகவும் இருக்கமுடியாது. இந்த அறச்சிற்றம்தான் சாமான்யனை கவிஞனாக மட்டுமில்லாமல் மகத்தான மனிதனாகவும் பார்க்கவைக்கிறது.