ஜென் என்பது சீன மொழிச் சொல் ஆகும். அதன் அர்த்தம் “தியானம் செய்”
என்பதாகும். ஜென் புத்த மதத்தை தழுவி இருந்தாலும் அதை ஒரு மதமாகக்
விஷயமாகக் கருதி சில மக்களுக்கு மட்டும் தனி என்று சொல்லிவிட முடியாது.
யாவருக்கும் ஒரு பொதுவான வழியே ஜென் ஆகும்.
நாம் செயல் செய்தபோதும், நம் மனம் அசையாமல் இருக்குமேயானால் அதுவே தியானம்
ஆகும். அல்லாத ஆசனம் இட்டு மூச்சை அடககி வராத தியானத்தை வா வா என்று
மனதுடன் சண்டையிடுவது தியானமல்ல. தியானக் கலையை நாம் அறிந்து சதா
தியானத்திலேயே நம்மை இருக்கச்செய்யும் கலையே ஜென். போதிதர்மர் அளிக்கும்
மகத்தான பத்து பாடங்களில் முதலாவது தியானம். ஜென் எதைப்பற்றியும்
சிந்திக்காதே என்கிறது.