இந்த யாத்திரையின் பொருண்மையில் மூன்று கூறுபாடுகள் இடம் பெறுகின்றன. பாகம் 1 சமுதாயம்: அரசியல் பாகம் 2 அறிவியல் பாகம் 3 ஆன்மிகம்: சமயம். 'சமுதாயம்: அரசியல்' பகுதியில், காட்டில் வேட்டையாடி, விலங்கெறிந்த கால முதல், கல்வியுக சமத்துவம் வரை சுருக்கமாக, முக்கியமான நிகழ்வுகள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. இயன்ற வரை பெயர் குறிப்பிடப்படாது மனித சமுதாய நிகழ்வுகளாகப் பேசப்பட்டிருக்கின்றன