கியூபா பன்னாட்டு மனித உரிமைக் கழகத்தின் நிறுவன உறுப்பினராகியுள்ளது. ஆனால் இதில் வட அமெரிக்கா உறுப்பினரே அல்ல... கியூபா 135 நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன், ஐக்கிய நாடுகள் சபை பொதுக் குழுவின் மூன்றில் இரண்டு பகுதிக்கு மேற்பட்ட ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வட அமெரிக்கா போட்டியிடத் துணியவில்லை... எந்த ரகசிய வாக்கெடுப்பை கியூபா நம்பியதோ அதனைக் கண்டு வட அமெரிக்கா அஞ்சியது. கியூபாவின் தேர்வு கொள்கைகளும், உண்மையும் வெற்றியடைந்ததைப் பறைசாற்றுகிறது. எத்தகைய கடுஞ்சூழலையும் தாங்கி நிற்கும் எங்களது திறனை மதித்து அளித்த அங்கீகாராமாக அது திகழ்கிறது.