ரோட்டில் சாணி போல ஏதோ அசிங்கமாக கிடந்தது. நிறைய பேர் அதைப் பார்த்ததுமே அது சாணிதான் என ஒதுங்கிப்போனார்கள். சிலருக்கு அது என்ன என்பதில் சந்தேகம். எனவே கையில் எடுத்து மோந்து பார்த்தார்கள். சாணி நாத்தம் அடித்தது. சிலர் உடனே அதை கீழே போட்டுவிட்டு நடந்தார்கள். ஆனால் இன்னும் சிலருக்கோ சந்தேகம் போகவில்லை. வாயில் வைத்துப் பார்த்தார்கள். வாயில் வைத்துப் பார்த்தபின் சிலர் அதை கீழே போட்டுவிட்டு நடந்தார்கள். மீதிப்பேர் அப்படியும் அதை சாணி என நம்பவில்லை. அந்த வாசமும், ருசியும் அவர்களுக்குப் பிடித்துவிட்டது. அதை உணவுப்பொருள் என நம்பி ருசித்துத் தின்ன ஆரம்பித்தார்கள். நிற்க.
சிலருக்கு குஜராத்தைப் பார்த்தவுடனே லட்சணம் தெரிந்துவிட்டது, ஒதுங்கிவிட்டார்கள். சிலருக்கு டீமானடைசேஷனில் புரிந்தது. சிலருக்கு ஜி.எஸ்.டியில் புரிந்தது. சிலருக்கோ காஷ்மீர் பிரச்சினையிலும் புரியவில்லை. ரசித்து ருசித்து தின்று கொண்டிருக்கிறார்கள்.