செவ்விலக்கியம் என்பதை பெரும்பாலும் கவிதைகளை வைத்துத்தான் மதிப்பிட்டு வருகிறோம். காரணம் செவ்விலக்கியம் என்பதற்கு ஒரு பழைமை தேவை; இலக்கிய வகைகளில் பழைமைச் செறிவுள்ள வரலாறு கவிதைக்கு மட்டும்தான் உள்ளது. உரைநடைப் படைப்புகளைத் தனியாகப் பிரித்துக் தொகுத்துக் கொள்ள வேண்டும். காலகட்டத்தை வைத்து அதை மதிப்பிட்டுவிட முடியாது. செவ்விலக்கியம் என்பதைப் பற்றிய வரையறையை வழக்கமாக டி.எஸ். எலியட்டிலிருந்து தொடங்குவதே மரபு. எலியட் செவ்விலக்கியம் என்பதை ‘பிற்காலத்திய இலக்கிய பரிணாமகதிகளுக்கு முழுக்க அடிப்படை அமைத்துத்தரும் முதல் தளம்’ என்று வரையறுக்கிறார். …