வசந்த வாழ்க்கையை வரவேற்கச் சென்று வெறுமையுடன் திரும்பியவர்கள் ஏராளம்.
வளமையை வலைவீசிப் பிடிக்கச் சென்று அது வசப்படாமல் வறுமை வலையில் சிக்கித் தவிப்பவர்கள் எத்தனையோ பேர்.
அதற்குக் காரணம் என்ன?
பொதுவாக, நம்மில் பெரும்பான்மையானவர்களுக்குச் செல்வத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதுதான் காரணம்.
இந்தச் செல்வப் பெட்டகத்தைப் பிரித்துப் பாருங்கள்.
செல்வம் என்பதை, பணத்தை மட்டுமே மையப்படுத்தும் விஷயமாக எண்ணிக் கொண்டிருக்கும் பலருக்கும் பல புதுமையான சிந்தனை அலைகளை இந்நூல் உண்டாக்கி விடுகிறது.
கல்விச் செல்வம்.. கேள்விச் செல்வம்.. பொருட் செல்வம்... எனத் தொடங்கி எண்ணிலடங்காத செல்வச் சுரங்கங்களை எளிதாய் காட்டி, நாம் அந்தச் செல்வங்களை எல்லாம் அடைந்தது போன்ற ஆனந்தத்தை நமக்கு உண்டாக்குகிறது இந்நூல்.