நீங்கள் அவளைப் பலமுறை சந்தித்திருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு அவளின் கதை தெரியாது. அப்படி அவளின் கதை தெரிந்திருந்தால் நிச்சயம் மனம் கனத்து அவளிடம் நலம் விசாரித்திருப்பீர்கள். எனக்கு அவளின் வாழ்க்கையின் கதை தெரியும். அவளைப்பற்றி எனக்குத் தெரிந்ததை நான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்...