ஒன்பது கட்டுரைகளை உள்ளடக்கிய இத்தொகுதி செவ்விலக்கியம் தொடர்பான அடிப்படை உரையாடல்களை முன்னெடுக்கிறது. தொகுப்பு மரபு, திணைக்கோட்பாடு, பிரதிகளில் பேசப்படும் மக்கள், பிரதிகளில் இடம்பெற்றிருக்கும் சொற்கள் எனும் அடிப்படைகளில், புதிய செவ்விலக்கிய வாசிப்பைக் கொண்டிருக்கிறது.
ஆழமான செவ்விலக்கிய வாசிப்பும் ஆழ்ந்த பயிற்சியும் சுஜா அவர்களுக்கு இருப்பதை இக்கட்டுரைகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. தொடர்ந்து செவ்விலக்கியத்தின் பல பரிமாணங்கள் குறித்த தொடர் ஆய்வில் சுஜா ஈடுபடவேண்டும். அதற்கான கட்டியமாக இந்நூல் அமைகிறது.
-பேரா. வீ. அரசு