மக்கள் சேனையும் மக்கள் ஆயுதப்படைகளும் இணைந்த வடிவமே, அல்லது மாற்றிச்
சொன்னால், மக்கள் ஆயுதப் படைகளும் மக்கள் சேனையும் இணைந்த வடிவமே அனைத்து
மக்களதும், நாடு முழுவதினதும், முழு தேசத்தினதும் ஆற்றலை முழுமையாய்
கைகூடச் செய்வதற்கு மிகப் பொருத்தமான இராணுவ அமைப்பு வடிவமாகும். அரசியல்
படைகளை ஆயுதப் படைகளோடும், அரசியல் போராட்டத்தை ஆயுதப் போராட் டத்தோடும்,
ஆயுத எழுச்சியை புரட்சிகரப் போருடனும் இணைத்தல் என்பது நம் நாட்டில்
புரட்சிகர வன்முறையின் அடிப் படை வடிவமாக இருக்கிறது. இது போலவே
ஆயுதப்படைகளை அரசியல் படைகளுடனும், ஆயுதப் போராட்டத்தை அரசியல்
போராட்டத்துடனும் இணைப்பதற்கும், எழுச்சியினதும் போரினதும் முறைகளையும்,
அனைத்து மக்களின் எழுச்சியினதும் மக்கள் யுத்தத்தினதும் இராணுவ அறிவையும்
பிரயோகிப் பதற்கும், புரட்சிச் சேனையை மக்களின் ஆயுதப்படைகளுடன் இணைப்பது
மிகப் பொருத்தமான இராணுவ அமைப்பாக இருக்கிறது.