சக்த யோகம் என்பது குருவுக்கும் சந்திரனுக்கும், தாங்கள் நிற்கும் ஸ்தானபேத்த்தால் ஏற்படுகிற அவயோகமாகும். இதன் பலனையும் , பலத்தையும் யாரும் விமர்சிக்கவுமில்லை. விரிவாக ஜோதிட நூல்களில் எழுதப்படவில்லை. இது சகடை என்றும் சகண்டயோகம் எனவும் கூறப்படுக்றது. சகடை போல வாழ்வை உயர்த்தவும், தாழ்த்தவும் சக்தியுள்ளது என்றே இதுவரை ஜோதிடர்களால் கூறப்பட்டு வந்துள்ளது. திரு. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் சகோதரர் ராம. கண்ணப்பன் அவர்கள், என்னிடம் ஒரு நாள் சகடயோகம் என்பதை சரியாக அளவிட்டுக் கூறமுடியுமா? முடிந்தால் நூலாகவே வெளியிடலாம் என்றார்கள். நானும் எழுதித்தருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன். சகடயோகத்தைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி நூல்தான் இது. இதை முற்றும் படித்துவிட்டு உங்கள் அபிப்பிராயங்களை பதிப்பகத்திற்கு எழுதியனுப்புங்கள். இதை எழுத்த்தூண்டிய திரு.ராம.கண்ணப்பன் அவர்களுக்கும் ,புத்தகமாக வெளியிட்ட கற்பகம் புத்தகாலயத்தார் அவர்களுக்கும், வாசகர்களாகிய உங்களுக்கும் நன்றி.
- புலிப்பாணிதாசன்.