திருக்குறளும்
திருவருட்பாவும் இயற்றப்பட்ட காலங்கள் வேறு வேறு. இரு இலக்கியங்களும்
சமூகத்திலிருந்து முகிழ்ந்தவை. இவ்விரு இலக்கயங்களும் சமூக மக்களின்
நல்வாழ்வு குறித்து சிந்தித்தன. அவற்றிற்கான வழிமுறைகளைப் பதிவு
செய்துள்ளன. வள்ளுவரும் வள்ளலாரும் தமிழ்ச் சமுதாயம் எவ்வாறு இருக்க
வேண்டும் என்றும்; அவர்கள் வாழ்ந்தகாலத்தில் எவ்வாறு இருந்தது என்றம்
தங்கள் படைப்புகள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர்.