என் சமையல் வகுப்பிலும் பல இல்லத்தரசிகள் 'கல்யாணமாகிப் பலவருடங்களாகியும் , ரசம் எனக்கு சரியாகவே வருவதில்லை.
பிரியாணியும், சமோசாவும் செய்வதெல்லாம் சரிதான். ஆனால் வாய்க்கு ருசியாகச் சாப்பிட உருப்படியாக ஒரு காரக்குழம்பாவது கற்றுக் கொண்டு கரக்கூடாத என்று என் கணவர் கேட்கிறார். என்று சொல்லவும், பாரம்பரிய உணவைப்பற்றி எழுத வேண்டுமென்று தீர்மானித்தேன். நம் பாரம்பரிய உணவைச் சொல்லிக்கொடுக்க வீட்டில் பெரியவர்கள் இல்லாததாலும், கூட்டுக்குடும்பங்கள் குறைந்து வருவதாலும், பெரியவர்களுக்கு செல்லிக் கொடுக்க நேரமில்லாமலோ, மனமில்லாமலோ போவதாலோ இந்த மாதிரி புத்தகங்கள் அவசியமாகிறது. 40 வருட திருமண வாழ்க்கை அனுபவமும், கூட்டுக்குடும்பத்தில் வசித்ததால் பெரியவர்களின் வழிகாட்டலும் உறுதுணையாகக் கொண்டு,சமையல் கட்டையே எட்டிப் பார்க்காதவர்களுக்கும் உபயோகமாகும்படி மிகப்பழமையான, பாரம்பரியமான சமையலையும், அரிய ,சிறப்புகளையும் அளித்திருக்கிறேன். படித்துப்பயனுறுவீர்கள் என்று நம்புகிறேன்.ஒரு குழந்தையைக் கவனிப்பதுபோல், கடைசிவரை வேளாவேளைக்கு, விதவிதமான நானே சமைத்து என் கணவருக்கு கொடுக்கும் போது, ரசித்து,ருசித்து அவர் சாப்பிடும் ஞாபகங்கள், மலரும் நினைவுகள்என் காரியங்கள் யாவினும் வெளியே அலட்டிக் கொள்ளாமல் கை கொடுத்த அவரை இழந்து பெரும் துக்கத்தை நெஞ்சில் சுமந்துயிருக்கிறேன்.
-- மெனுராணி செல்வம்.