இவை சூபி தரிசனங்களின் வார்த்தை வடிவங்கள். இலை உதிர்ந்து அதிர்ந்து
உருவாகும் நீர்வளையங்கள் போன்ற லாவகத்துடன் நம் மனதில் இந்த உலகின் மீதான
தெளிவை ஏற்படுத்த விழைகின்றன. இவற்றை அளைகையில் நாம் பேருண்மைகளின்
தூயவெளியில் அலைவதும் கூடுகிறது. பல இடங்களில் நுட்பமாக சூபி கதைகளைப்
பயன்படுத்திய ஓஷோவும் சூபி கதைகள் இதயத்தில் தைக்கும் அம்புகள் என்று
கூறுகிறார். சூபி ஞானிகளின் சூபி குருமார்களின் மானுடக் கனிவான இவை,
ஞானத்தின் இறக்கைகளுக்கான இறகுகள்.