பிணிகள், இயலாமை, உடல் இயங்க முடியாத போது தீர்வுகளைத் தேடி ஓடி நாடுகிறோம். சோம்பல், சோர்வு, உடல் ஒத்துழைப்பு இன்மை, உழைப்பின்மை அதிகரிக்கும் சமயம் உடல் பயிற்சிகள் அவசியமாகின்றன. எல்லோராலும் உடற்பயிற்சிகளை செய்ய இயலவில்லை. ஆனால், நடைப்பயிற்சி அருமையான அற்புதமான பயிற்சி எனலாம். அவசியமான, எவ்வயதினருக்கும், எக்காலத்திற்கும் ஏற்ற எளிய இனிய நடைப்பயிற்சியைப் பற்றிய நல்ல விஷயங்களை அருமையாக அழகு தமிழின் அன்பு இரத்தின சக்திவேல் விளக்குகிறார். அன்றாட வாழ்க்கை நடைமுறையில் விரும்பி இணைக்கும் உத்திகளை விவரிக்கிறார். தமிழக நன்பர்கள் படித்து பயன்பெற்று உயரிய ஆரோக்கியம் பெற்றிட வாழ்த்துகிறோம்.
இவன்
பதிப்பகத்தார்.