'பயன்மிகு கீரை மருத்துவம்' எனும் இந்நூலில் பச்சிலைகளின் குண நலன்களையும் - மருத்துவத் தன்மைகளையும் - அதன் வேறு பெயர்களையும் ஓர் அரிய ஆராய்ச்சி மனப்பான்மையுடன் விளக்கி உள்ளார், நண்ப் திரு. நீலவன் அவர்கள்.
நமது பண்டைய இலக்கியங்களும், புராணங்களும், பச்சிலையின் அரிய மருத்துவத் தன்மையை விளக்கியுள்ளன. ரிக் வேத்த்தில் அதர்வண வேத்த்திலும் இதன் மருத்துவ முறைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
'எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - நோய் இல்லாத நிலை இங்கு வரவேண்டும்' என்ற நெடு நோக்கில் இந்நூலை வாசகர்களுக்கு அளிப்பதில் பெருமையடைகிறேன்.
மு. செல்வராசன்