சினம் மிகுந்த வேளையில் என்னைக்கிள்ளுக்கீரை என்றா நினைத்தாய் என்று நம்மில் சிலர் பேசுவது வழக்கம். இவ்வாறு நாம் அலட்சியமாகப் பேசும் கீரை வகைகளின் பயனை இந்நூல் விவரிக்கிறது. நாம் விரும்பி விதைத்துப் பயிரிடும் கீரைகளோடு நம் கவனத்திற்கும் அப்பாற்பட்டு காட்டிலும் மேட்டிலும் பல கீரைகளையும் சேர்ந்து 27 கீரைகளின் குண இயல்புகளை ஆசிரியர் மருத்துவ மேதை டாக்டர் ஏ.ஆர். என்.துரைராஜ் அவர்கள் ஆராய்ந்து எழுதி இருக்கிறார்கள். ஆசிரியரின் அறிவுரைப்படி கீரைப் பயனை அறிந்து பயன்படுத்தி நாம் எல்லோரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்நூல் வழிகாட்டுகிறது. ஆசிரியருக்கு எங்கள் நன்றி உரியதாகும்.
- பதிப்பகத்தார்.