சோவியத் ரஷ்யா இன்று இல்லை. லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களை நினைவுகூரவோ, கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான்.கம்யூனிசம் என்கிற சித்தாந்தம். லெனின் என்கிற செயல்வீரரின் ஞாபகம். இன்னும் நூறாண்டுகள் கழிந்தாலும் மறக்கமுடியாத மாபெரும் புரட்சிக்காரரின் சாகசவாழ்க்கை இது. அதிரடிகளால் ஆன வாழ்க்கை. அடி ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்ததோ தேச நலன் என்கிற உயர்ந்த லட்சியம். இப்படியும் ஒரு மனிதர் வாழ முடியுமா? வாழ்ந்து காட்டிஇருக்கிறார் லெனின்.