சவால்களை மட்டுமே விரும்பிய ஹென்றி ஃபோர்டின் வாழ்க்கை அவர் அறிமுகம் செய்த காரைப் போலவே வேகமும் விறுவிறுப்பும் நிரம்பியது. ஹென்றிஃபோர்ட் ஒரு சர்வாதிகாரி, ஆனால் சேவை மனப்பான்மை கொண்ட சர்வாதிகாரி. சர்வ அதிகாரங்களையும் உன்னதமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியவர். அவருடைய வாழ்க்கை காரில் ஏறி அமருங்கள். ஒரு வித்தியாசமான பயணம் உங்களுக்குக் காத்திருக்கிறது. வாழ்வின் மிக முக்கியமான சில பாடங்களை, கார்ப்ரேட் உலகின் சில முக்கிய ஃபார்முலாக்களை நீங்கள் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள்.