உணவைச் சாப்பிட்டால்தான் உடலுக்குச் சக்தி கிடைக்கும். உணவை அனைவரும்
சாப்பிடுகிறோம். ஆனால் எல்லோருமே சக்தி அதிகமுள்ளவர்களாக இல்லை என்பது
உண்மை. தென்னிந்தியர்களின் உணவு அரிசியை மையமாகக் கொண்டுள்ளது. அரிசியில்
உண்மையில் சக்தி குறைவாகவே உள்ளது. உடலுக்குச் சக்தி கிடைக்கச் சாப்பிடுவதை
விடவும், பசிக்கு உணவைச் சாப்பிடு பவர்கள்தான் அதிகம். பசிக்கும்போது
சக்தி அதிகம் தரும் உணவுகளைச் சாப்பிடுவது கடினமானதல்ல. அதற்காக அதிகம்
செலவும் செய்ய வேண்டியதில்லை. உண்மையில் சக்தி அதிகமுள்ள பல உணவுப்
பொருட்கள் மலிவான விலையில் விற்கப்படுபவையாகும்.