1930ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் அரும்பிய கல்யாண சுந்தரம் 1956-இல் வெளிவந்த 'படித்த பெண்' படத்திற்குப் பாடல்கள் எழுதி திரைப்பட பாடலாசிரியராக மலர்ந்தார். 1956-இல் ஆரம்பித்து 1959 வரை மூன்றே ஆண்டுகளில் தமது சிந்தனைத் திறத்தால் அற்புதமான முற்போக்கு சிந்தனை பாடல்களையும், தத்துவப் பாடல்களையும், காதல் பாடல்களையும் எழுதி தமது தனித்துவத்தால் 'பாட்டுக் கோட்டையாக' வலம் வந்து சாதனைப் படைத்தார். தமது பாட்டுத் திறத்தால் குறைந்த காலத்தில் நெஞ்சில் நிறைந்த பாடல்களை மனத்தில் நீங்கா இடம் பெற்ற அவரின் பாடல்களின் மொத்த தொகுப்பே இந்நூல். அவரது திரை இசைப் பாடல்கள் அல்லாது தனித்துவமான இதழ்களில் எழுதியவையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. படித்துச் சுவைக்கவும் பாடிக் களிக்கவும் இந்நூல் பெரிது உதவும்.