தீர்த்தமலை
ஒரே மலையில் ஐந்து தீர்த்தங்கள். ஐந்து தீர்த்தங்கள் இங்கே இருப்பதால் தான் பேரே தீர்த்தமலை என்று உருவாகி உள்ளது.இந்த மலையில் இறைவன் சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறார். இங்கிருக்கும் சிவபெருமான் தீர்த்தகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ஓடி வரும் புனித நீரூற்றுகளில் குளித்தால் நமது பாவங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்று இந்த பகுதியில் இருக்கும் மக்கள் நம்புகின்றனர்.
தர்மபுரிக்கு அருகில் அமைந்திருக்கும் தீர்த்தமலை மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மீக தலமாகும். இந்த தலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூருக்கு அருகில் அமைந்துள்ளது.
தீர்த்தமலையின் உச்சியில் அமைந்துள்ளது இந்த தீர்த்தகிரீஸ்வரர் கோயில். இது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், தெற்கில் சிவபெருமான் வாழும் இடமாகவும் நம்பப்படுகிறது.
இதோ தீர்த்த மலை யாத்திரையில் தீர்த்தங்களில் நீராடிவிட்டு, நாம் இறை தரிசனம் பெற காசி விஸ்வநாதரை அடைந்தோம். இங்கே ஒரு சிவ பக்தை இருந்தார்கள். வழக்கம் போல் செல்லப்பன் அண்ணன் திருவாசகம் பாட, நாமும் இணைந்து கொண்டோம்.