அசோகமித்திரனின் சமீப இரண்டு குறுநாவல்களும் மூன்று சிறுகதைகளும் கொண்ட
தொகுப்பு. நகர்ப்புறத்துக் கீழ் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்களைக்
கூரிய பார்வையோடு அடங்கிய தொனியில் வெளிப்படுத்தியிருக்கிற ;பம்பாய் 1944
லீவு லெட்டர் ஆகிய குறுநாவல்கள் வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும்
அருமையான படைப்புகள். சிறுகதைகளில் எள்ளல்,ஏளனம் இல்லாத நகைச்சுவை
அசோகமித்திரனின் பாங்கு. அது இப்போதும் அவருக்குக் கைவரப் பெற்றிருக்கிறது.
சிறிய தொகுப்பாக இருந்தாலும் மனிதர்களின் இயல்புகளைப் பெருமளவு திறந்து
காட்டுகிறது