'' தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்தும் ஊறும் அறிவு.''என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப பிற நூல்களைப் படித்து விட்டுத் திருக்குறளைப் படித்தால் அதன் பெருமை மேலும் மேலும் புலப்படுகிறது. திருக்குறளின் கருத்தாழத்திற்கு வரையறை இல்லை. படிப்பவர்களது மனம் தான் அதற்கு எல்லை. நான் கற்ற கல்வியும் பெற்ற அனுபவங்களும் திருக்குறளின் அற்புதமான ஆற்றலை மேலும் மேலும் எனக்கு உணர்த்துகின்றன. அதனடியாக தோன்றியது இந்த நூல்.