ஒத்ததை ஒத்தது குணப்படுத்தும்’ என்பது டாக்டர் ஹானிமன், தன்னையே சோதனைக்கு உட்படுத்தி, கண்டடைந்த ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். நம் மொழியில் `முள்ளை முள்ளால் எடுப்பதுபோல' என்று சொல்லலாம். ஹோமியோபதி மருத்துவம், நோயாளிகளை அணுகும்முறை மற்ற மருத்துவ முறைகளிலிருந்து வேறுபட்டது. நோய்களுக்கான மருந்து என்பதைத் தவிர்த்து ஒவ்வொரு மனிதருக்குமான மருந்து என்ற முறையில் நோயாளிகளை அணுகக்கூடியது. உதாரணமாக, காய்ச்சல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் ஒவ்வொருவரும் தனித்துவமிக்கவர்கள் என்னும்போது, மருந்து மட்டும் எப்படி பொதுவாக இருக்கும் என்ற நியதியின்படி ஹானிமன் உயிராற்றல் பற்றிய கோட்பாடுகளை வளர்த்தெடுத்தார்.