ஜாதகத்தில் மாந்தி என்பது நம்ம தமிழ்நாட்டில் பெரிதாக
எடுத்துக்கொள்வதில்லை..ஆனா கேரளாவில் அதை முக்கியமாக எடுத்துக்குவாங்க..சனி
புத்திரன் மாந்தி ..எனவே சனியை போலவே மாந்தியும் பலன் தரும்
என்பார்கள்..அதாவது ஜூனியர் சனிபகவான் .இவர்
ஜாதகத்தில் எங்கெங்கு நின்றால் என்னென்ன பலன்களை தருவார் என பொதுவாக
பார்ப்போம்...இதை அப்படியே எடுத்துக்கொள்ள தேவையில்லை..சுபருடன் சேர,சுபர்
பார்க்க நல்ல பலனும் உண்டாகும்.
மாந்தி நின்ற ராசிநாதனும் மாந்தியுடன் கூடிய கிரகங்களும் சனி போல
கெடுப்பர்.லக்னத்தில் நிற்க நோய் உண்டாகும்.ஊனம் உண்டாகும்...அதிக மன
சோர்வு,உடல் சோர்வு கெட்ட குணநலன்,கெட்ட நண்பர்கள் சேர்க்கை உண்டாகும் .