புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே நாமெல்லாம் நாள் காட்டிகளையும், பஞ்சாங்களையும் வாங்கிக் கொண்டு விடுகிறோம், நாள் காட்டிகளில் நல்ல நாள், தீய நாள் என்று போடுகிறார்கள். ஆனால் பஞ்சாங்களில் அப்படிப் போடுவதில்லை.அமிர்தயோகம்,சித்த யோகம், மரண யோகம், என்று போடுவார்கள்.அன்றாடம் நட்சித்திர இருப்புப் போடுவார்கள். கரி நாட்கள் விவரம் போடுவார்கள்.இன்னின்ன திதி என்பதையும் போடுவார்கள்.இவற்றைக் கொண்டு நல்ல தீய நாட்களை நாம் தாம் அறியவேண்டும். நல்ல,தீய நாட்களை அறிவதற்குக்கூட சிலர் அறிந்ததே இருக்கிறார்கள்.இது தவிர பஞ்சாங்கங்களில் சொல்லப்பட்டுள்ள அகசு, தியாஜ்யம்,உதயாதி நாழிகை, சந்திராஷ்டம் தினங்கள், நாள் விழிப்பு, பஞ்சகம், கர்ப்போட்ட நாட்கள் பற்றியெல்லாம் அனேகருக்குத் தெரியாது.அவை பற்றியெல்லாம் சொல்லித் தருவதுதான் இந்நூலின் நோக்கம்.