விரிவான பொருளில், அறிவைப் பெற்ற ஒரு திட்டமிட்ட செயலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் யாராயினும் அல்லது சிந்தனைக் கருத்துக்கள் அல்லது தத்துவம் தொடர்புடைய விஷயங்களில் ஈடுபடுத்திக்கொள்ளும் தனிநபர், ஒரு அறிவியல் அறிஞர் அல்லது அறிவியலாளர் அல்லது விஞ்ஞானி ஆவார். மிகச் சரியானப் பொருளில், ஒரு அறிவியல் அறிஞர் என்பவர் அறிவியல் முறையினைப்[1] பயன்படுத்தும் ஒரு தனிநபர் ஆவார். அந்நபர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிவியல்[2] விஷயங்களில் ஒரு வல்லுனராக இருக்கலாம். இக்கட்டுரை அவ்வார்த்தையின் மிக மிகச்சரியான பயன்பாட்டினை கருத்தில் கொள்ளுகிறது.