உணவு, காற்று, அறிவு, மனம், இறை உணர்வு எனும் இந்த ஐந்தும் கூடி கலந்து உறவாடி நலம் தேடித் கொண்டிருப்பதுதான் உடலாகும். இதை நலமோடு வைத்திருப்பதே நம் முதல் கடமை. சுவாசம் எனும் மூச்சே நம் உயிரை இயக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது. ஒரு நிமிடத்துக்கு சுமார் 15 முதல் 18 முறை சுவாசிக்கிறோம். இதில் எந்த அளவுக்கு ஆழ்ந்து அகன்று சுவாசிக்கிறோம் என்பதில் நமக்கு அக்கறையே இல்லை, சுவாசம் ஆழ்ந்து குறையக் குறைய நம் ஆயுள் நீடிக்கிறது என்கின்றன சித்தர்களின் நூல்கள்.