மக்கள் இன்று ஏதாவது ஒரு வேளை செய்துக் கொண்டிருக்கிறார்கள். விண்வெளி வீரர், தொழிலதிபர்,தச்சர், சமையல்
நிபுணர்,மருத்துவர்,பொறியாளர்,விவசாயி வழக்கறிஞர்,இசையமைப்பாளர், செவிலியர்,விமானி, புகைப்படக்காரர்,காவல்துறை அதிகாரி, மென்பொருள் நிபுணர்,விஞ்ஞானி, பாடகர், ராணுவ வீரர், தையல்காரர் ஆசிரியர், நெசவாளர் போன்ற எத்தனையோ வேளைகள் இருக்கின்றன. நாம் செய்யும் வேளை எதுவாக இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் வேளைக்கு போக வேண்டும் என்ற கட்டாயம். படித்து முடித்து விட்டு, என் படிப்புக்கு ஏற்றார் போல் வேளை கிடைக்க வில்லை என்று சொல்லக்கூடாது. கிடைத்த வேளையை செய்ய வேண்டும். ஒரு வேளையில் சேர்ந்துக்கொண்டு மேலும் வேளை பார்க்கலாம், படிக்கலாம் .
- பதிப்பகத்தார்.