வாணியை சரணடைந்தேன் - மனசு விரக்தியடையும் போது, எரிச்சலடையும் போது, மனசு பாரமாகி கண்ணீர் விடும்போது, இப்படிப் பட்ட சூழலில் ரமணிச்சந்திரன் எழுதிய இந்த புத்தகத்தை படித்தால் மருந்தாக இருக்கும் மனதிற்கு.
மதுரவாணி- வித்யாசாகர் இருவருடைய முதல் சந்திப்பு பெரிய மோதலாகவே இருந்தது. ஆனால் சின்னப் பெண் நிலாவினால் இருவரும் அடிக்கடி சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.ஒவ்வொரு சந்திப்பிலும் அவனது மிரட்டலும் அவளுடைய கோபமும் குறைந்துக் கொண்டே வந்தது உண்மையே.ஆனால் இருவருடைய காதல் கனிய பெரிய முட்டுக்கட்டை நிலாவின் பெற்றோர் மூலம் இருக்கிறதே !