1972-1986 வரையான பதினைந்து வருடகால ஈழத் தமிழ்த் தேசிய அரசியலின் குறுக்குவெட்டுமுகம் இப்படைப்பு. 1986 டிசம்பர் 13 அன்றுடன் ஒரு பயணம் முடிவுக்கு வருகின்றதை, அகிம்சை வழியில் தொடங்கி, ஆயுதப் போராகப் பரிணமித்த காலத்தை, அக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளை, அதிகாரமும் ஆயுத முனையும் அதனைத் தீர்க்க முனைந்ததை, வரட்டுத்தனம் வாசலெங்கும் விதைந்து கிடந்ததை, சிறு வெளிச்சமேனும் ஏற்ற முயன்றவர்களை, காலம் கொஞ்சமும் இரக்கமில்லாமல் அவர்களைச் சிதைத்து முடித்ததை பேசுகின்ற ஓர் அனுபவக்குறிப்புக்களே இவ்வாக்கம். அனுபவக் குறிப்புக்களை புனைவுமொழிகொண்டு எழுதியுள்ளார்.
- அ. இரவி.