
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Sriranga Makimai
Free shipping over ₹500
எங்கே
சுற்றினாலும் ரங்கனை வந்தடைய வேண்டும்’ என்றொரு வாசகம் உண்டு. நம்
வாழ்க்கையில் என்ன செய்தாலும், எத்தனை நல்லவை செய்திருப்பினும், எவ்வளவு
அல்லவை செய்திருந்தாலும், அரங்கனை, ரங்கநாதனை, ரங்கநாதப் பெருமாளை
இறுதியில் சரணடைந்துவிட்டால் மோட்சம் நிச்சயம்; வைகுண்டத்தில் சொர்க்கவாசல்
நமக்குத் திறக்கப்படும் என்று புராணம் சொல்லிவைத்த மாபெரும் விஷயத்தை மிக
எளிதாக உணர்த்தியிருக்கிறார்கள், இந்த வாசகத்தின் மூலம்!
இத்தனை
பெருமை மிக்க ஸ்ரீரங்கம், ஒருகாலத்தில் அழகிய தீவு போல் அமைந்திருந்ததாகச்
சொல்கிறது புராணம். காவிரி - கொள்ளிடம் ஆறுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள
ஸ்ரீரங்கம், இன்றைக்கும் தன் அழகுடன், தனியழகுடன், மிகுந்த
சாந்நித்தியத்துடன் அமைந்திருக்கிறது. சயனித்த திருக்கோலத்தில் இருந்தபடி,
இந்த உலகுக்கும் உலக மக்களுக்கும் விடியலைத் தந்து சேவை சாதித்துக்
கொண்டிருக்கிறார் ரங்கநாதப் பெருமாள்.