மந்த்ராலய மகான் ஶ்ரீ ஶ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளைப் பற்றி தெரியாதவர்களோ, அவர் திருநாமத்தை உச்சரிக்காதவர்களே இல்லையென சொல்லுமளவுக்கு அம்மகானின் கீர்த்தி இன்று பட்டி தொட்டிகளிலெல்லாம் பரவியுள்ளது. அவர்தம் திருஉருவப் படங்கள் வீடுகளோ, கடைகளோ, இருக்காது என்று உறுதியாக கூறிவிடலாம்.