முத்தமிழ் கலைகளிலே மூத்த தமிழ்க் கலை வில்லுப்பாட்டு! கருவில் அமைந்த திருவாக தென்தமிழ் நாட்டில் வில்லிசைக் கலை, தன் தோற்றத்திலேயே ஒரு தேசீய குணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது! வேட்டைக்குச் சென்ற ஒரு சிற்றரசனின் மனத்தில், ஓர் அம்பு தைக்கிறது - தைத்த இடத்தில், அன்பு விதைக்கப்படுகிறது. தன்னால் பல்லுயிர்கள் படும்பாடு - அவனால் தாங்க முடியவில்லை! இதயம் அழுகிறது இறைவனைத் தொழுகிறது!