மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய உணவுப்பொருள்களில் முதல் இடம் கீரைகளுக்குத்தான். விலை மலிவானதும்கூட. ஆனால், மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் அதிக சத்துகள் அடங்கியவை. இந்தப் புத்தகத்தில் சுமார் 25 கீரைகளைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கீரைகளை எப்படியெல்லாம் சமைத்துச் சாப்பிடலாம், அவற்றில் உள்ள மருத்துவக் குணங்கள் என்னென்ன. அவற்றில் உள்ள சத்துகள் என்னென்ன என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் எளிய முறையில் சொல்லப்பட்டுள்ளன. வழக்கமான வகையில் இல்லாமல் வித்தியாசமான உணவுக் குறிப்புகள் உள்ள இந்தப் புத்தகம்,உங்கள் சமையல் அறையில் இருக்க வேண்டிய ஒன்று.
-டாக்டர் அருண் சின்னையா.