ராஜீ, சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம், தன் அம்மாவிடம் பொய் சொல்லி தன் காரியங்கள் சாதித்து வந்தான். ஒரு நாள்... ராஜீ தன்னிடம் பொய் பேசுகிறான் என்பதை அறிந்த அவனின் அம்மா, ராஜீவை பார்த்து கூறினாள்.
டே! ராஜீ, நீ இது நாள் வரையிலும் பொய் பேசி உன்காரியங்களைச் சாதித்து வந்திருக்கிறாய்! என்பதை நான் இன்று இப்போதுதான் அறிந்தேன்!
அதை நினைத்து, எனக்கு வெட்கமாக இருக்கிறது.
நீ பொய் பேசி, என்னிடம் உன் தேவைகளைப் பூர்த்திப் பண்ணும் சூழலையா? உனக்கு நான் தந்திருக்கிறேன்.
பொய் பேசுவதால் பெரிய பலன் ஒன்றும் இல்லை என்பதை நீ அறியா வண்ணமா நான் உன்னை இது நாள் வரையில் அறிவு உரைக்காமல் வளர்ந்திருக்கிறேன்!
இதேயெல்லாமு நினைத்தில் எனக்கு, உன் மீது குறை சொல்ல மனம் வரவில்லை. உனக்கு நான்தானே, உண்மையின் வரலாறுகளைச் சொல்லித் தராததை எண்ணி வெட்கப்படுகிறேன்.