கிராமத்து இளைஞனின் ஆற்றலும் ஆசையும் நகரத்து வீதிகளில் எவ்வாறு நைந்து போகின்றன. எனினும் அவனது பொறுமையும் பேருழைப்பும் எப்படி அவனை மீட்டெடுக்கின்றன என்பதுதான் புதினப் பொருள். நகர நெருக்கடிகள். உறவுகளின் சுயநலம், நண்பர்களின் புரிதல்கள், சினிமா உலகின் சீரழிவுகள், பத்திரிகை உலகின் பரிதாப நிலைமை போன்றவற்றைச் சிறப்பாகச் சித்தரிக்கிறார். அவன் சினிமா உலகில் நுழையத் துடிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் அடையாளமென்றால் பாடலாசிரியர் வெள்ளித் திரையில் வெற்றி பெற்ற விரல் விட்டு எண்ணத்தக்க மிகச்சிலரின் உருவகமாக விளங்குகிறார்.