புனை கதை சொல்லும் உத்தியில் ,சிறுவர் , சிறுமியர்களுக்கு மிகவும் பயன் தரும் வடிவில் அமைந்துள்ள இத்தொகுதியே விஞ்ஞானக் களஞ்சியம் எனும் நூலாகும். இப் புத்தகத்தில் கலந்துரையாடல் வடிவில் புகை, ஆகாயம், தீ, ஒலி,ஒளி,பூமி, சூரியன், சந்திரன் என எல்லாவிதமான கோள்கள் பற்றியும் சிறப்பாக விவரிக்கப் பட்டுள்ளன. விஞ்ஞான நூல்கள் அருகி வரும் இவ்வேளையில் மாணவச் செல்வங்கள் பயனுறும் விதத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூலை பள்ளி, மேனிலைப் பள்ளி நூலகங்களில் இடம்பெறச் செய்தால் எல்லாக் குழந்தைகளும் பயன் பெறுவர்.